கராத்தே போட்டியில் தங்கம் வென்ற 7 வயது சிறுவன்

1542பார்த்தது
*துபாயில் நடைபெற்ற கராத்தே இன்டர்நேஷனல் சாம்பியன்ஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த சிறுவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை*

துபாய் நாட்டில் இன்டர்நேஷனல் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது இதில் இந்தியா இலங்கை ரஷ்யா மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் சென்னையைச் சேர்ந்த கிஷன் என்கிற சிறுவன் ஏழு வயது உட்பட்ட பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இதையடுத்து துபாயிலிருந்து சென்னை திரும்பிய சிறுவனுக்கு உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவன் கிஷன் குறுகையில்,

ஏழு வயது பிரிவு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் என்று உள்ளேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ரஷ்யா நாடுடன் மோதும் பொழுது மிகவும் போட்டி கடினமாக இருந்தது. இவ்வாறு கூறினார்.

பயிற்சியாளர் பிரபாகரன் கூறுகையில்,

எங்கள் பயிற்சி மையத்திலிருந்து இன்டர்நேஷனல் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு 7 வயது பிரிவில் கிஷன் தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்து உள்ளார் கடின பயிற்சி மூலம் அவர் உலக அரங்கில் சாதனை செய்து உள்ளார் இவ்வாறு கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி