சங்கராபுரம் அரசம்பட்டு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது: திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவனது கடந்த மாதம் 17ஆம் தேதி காப்பு கட்டுதளுடன் தொடங்கியது, இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல்
வெகு விமர்சையாக நடைபெற்றது இதற்கு முன்னர் முத்துமாரி அம்மனுக்கு பால் தயிர் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு பூஜைகளுடன் தொடங்கப்பட்ட திருத்தேரானது முக்கிய வீதிகளின் வழியாக சென்று மேள தாளங்கள் முழங்க பக்தர்களுக்கு திருத்தேரில் முத்துமாரியம்மன் காட்சியளித்தார், இதனைத் தொடர்ந்து தேர் திருவிழாவில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.