கள்ளச்சாராய வழக்கில் 24 பேருக்கு காவல் நீட்டிப்பு

50பார்த்தது
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர். இதுதொடர்பாக 24 பேரை சி.பி.சி.ஐ.டி. , போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதனையொட்டி, கடலுார் மத்திய சிறையில் உள்ள 24 பேரையும் சி.பி.சி.ஐ.டி. , போலீசார் நேற்று (செப்.13) காணொளி காட்சி மூலம் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, 24 பேரின் நீதிமன்ற காவலை வரும் 26ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி