ரிஷிவந்தியம் - Rishivandiyam

மணலுார்பேட்டை: மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷியன் பலி

மணலுார்பேட்டை, ஆஞ்சநேயர் கோவில் அருகே, யாசின் என்பவருக்கு சொந்தமான கடை உள்ளது. இந்த கடையை திருவண்ணாமலையை சேர்ந்த ராமு மகன் புஷ்பன் வாடகை எடுத்து, பேக்கரி வைக்க நேற்று மாலை தயார் செய்தார். அங்கு எலக்ட்ரிக்கல் பணியில் கொளக்குடியை சேர்ந்த நாராயணசாமி மகன் சிவகுமார், (27); ஈடுபட்டார்.  அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சிவக்குமாரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மணலுார்பேட்டை போலீசார் அவரது உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிவக்குமாருக்கு திருமணம் ஆகி நான்கு மாதங்கள் ஆகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி