ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரில் நடந்த தி. மு. க. , பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். தி. மு. க. , ஒன்றிய செயலாளர்கள் பாரதிதாசன், துரைமுருகன், மாவட்ட துணை செயலளார் அண்ணாதுரை, பொதுக்குழு உறுப்பினர் ராஜி, மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜி முன்னிலை வகித்தனர்.
கள்ளக்குறிச்சி தி. மு. க. , தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம். எல். ஏ. , சிறப்புரையாற்றினார்.. கூட்டத்தில், ஊராட்சி தலைவர்கள் கிருஷ்ணபிரசாத், ராமமூர்த்தி, நிர்வாகிகள் சிவமுருகன், சுரேஷ் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.