கள்ளக்குறிச்சி: எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீதான நடவடிக்கைகள், தீர்வுகள், முடிவு பெறாத புகார்கள் குறித்த குறைதீர்வு கூட்டம் எஸ். பி. , ரஜத் சதுர்வேதி தலைமையில் நேற்று நடந்தது. பொதுமக்களிடமிருந்து 28 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை செய்து உடனடி தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் டி. எஸ். பி. , க்கள் தேவராஜ், குகன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.