கள்ளக்குறிச்சி எஸ். பி. , ரஜத்சதுர்வேதி அறிவுறுத்தல்படி பொது பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்புகளை மேம்படுத்தும்வகையில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டங்களில், குடியிருப்பு, வணிக நிறுவனங்கள் மற்றும் முக்கிய வீதிகளில் சி. சி. டி. வி. , கேமராக்களை அமைக்க வேண்டும். ஆன்லைன் மோசடிகளில் பாதுகாப்பாக இருக்கவேண்டும். ஹெல்மெட் அணிதல், சீட் பெல்ட் பயன்படுத்துல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்கள் அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன் போதை பொருட்கள், தடை செய்யப்பட்ட குற்றவாளிகள் மற்றும் ரவுடித்தனம் பற்றிய தகவல் பகிர்வதன்அவசியம் குறித்தும், விளக்கப்பட்டது.