மூங்கில்துறைப்பட்டு: நிலத்தகராறு தம்பதி மீது வழக்கு

71பார்த்தது
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டத்தில் நிலத்தகராறில் தம்பதி மீது வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டத்தைச் சேர்ந்தவர்கள் சுப்ரமணியன், 72; ஏழுமலை, 50; பங்காளிகள். இருவருக்கும் நிலம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
நேற்று சுப்ரமணியன் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், சுப்ரமணியை ஏழுமலை மற்றும் அவரது மனைவி அஞ்சலையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.


இதுகுறித்து சுப்ரமணி அளித்த புகாரின் பேரில், ஏழுமலை, அஞ்சலை ஆகிய இருவர் மீதும் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி