கள்ளக்குறிச்சி: கிணற்றில் ஆண் உடல் போலீசார் விசாரணை

71பார்த்தது
கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 50; இவர் கடந்த 5ம் தேதி வெளி யில் சென்று வருதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றவர், வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

இந்நிலையில் அன்று இரவு சக்திவேல் என்பரின் நிலத்தில் உள்ள கிணற்றின் அருகில் கோவிந்தசாமியின் செருப்பு கிடக்கும் தகவலை அறிந்த குடும்பத்தார் சென்று பார்த்தபோது, கிணற்றில் கோவிந்தசாமி உடல் மிதந்தது.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று, கோவிந்த சாமி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி