கன்னியாகுமரி தமிழ்நாட்டின் மிகச் சிறிய மாவட்டம் ஆகும். பரப்பளவில் 1672 சதுர கி.மீ மட்டுமே உள்ளது. மக்கள் அடர்த்தியில் சென்னைக்கு அடுத்த இடம் வகிக்கிறது. கல்வி அறிவில் தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக விளங்குகிறது. இட வடிவமைப்பிலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கன்னியாகுமரி வேறுபட்டு நிற்கிறது. உலகத்தில் இங்கு மட்டுமே சூரிய உதயத்தையும், சூரிய மறைவையும் ஒரே இடத்தில் பார்க்கும் வடிவமைப்பை பெற்றுள்ளது.