மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் அக்.20-ம் தேதி பிரகாஷ் சிங் பாகேல் (31) என்ற இளைஞர் ஒரு கடையில் அமர்ந்து தனது நண்பர்களுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது பிரகாஷ் திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதனால் பயந்துபோன அவரது நண்பர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.