நாவல் பழம் சுவையானது மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. அதே நேரம் நாவல் பழங்களைக் காட்டிலும் அதன் கொட்டையை பதப்படுத்தி பவுடராக்கி சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு பலன் அதிகம் என்கிறது ஆய்வுகள். நாவல் பவுடரை தொடர்ந்து எடுத்துகொண்டவர்களை பரிசோதனை செய்ததில் அவர்களது சர்க்கரை அளவும். சிறுநீரில் வெளியேறிய சர்க்கரை அளவும் குறைந்தது கண்டறியப்பட்டது. இதன் கொட்டைகள் மற்றும் பொடிகளின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.