பிரபல மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிப்போட்டி வரை சென்று தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும் அவருடைய முயற்சியை பாராட்டி பல்வேறு தரப்பினரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விரைவில் நடக்கவுள்ள ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் வினேஷ் போகத் போட்டியிடவுள்ளதாக அவருடைய உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.