தடுப்பூசிக்கும், மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கா?

54பார்த்தது
தடுப்பூசிக்கும், மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கா?
சமீபகாலமாக இளம் வயதினர் மாரடைப்பால் மரணமடைந்து வருவதற்கு கோவிட் தடுப்பூசி தான் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இது குறித்து நேஷனல் ஹார்ட் இன்ஸ்ட்டியூட் இயக்குனர் ஓ.பி யாதவ், “கோவிட் தடுப்பூசிக்கு முன்பே இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது சில பிரபலங்கள் மாரடைப்பால் மரணமடைவதால், இது இளைஞர்கள் மத்தியில் விவாத பொருளாக மாறி இருக்கிறது” எனக் கூறினார். இருப்பினும், தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுகிறது என ஆய்வு முடிவுகள் வெளியானதால் பொதுமக்களுக்கு மாரடைப்பு அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி