கள்ளசாராயத்தில் டர்பன்டைன் ஆயில் கலந்து விற்பனை

81பார்த்தது
கள்ளசாராயத்தில் டர்பன்டைன் ஆயில் கலந்து விற்பனை
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து தற்போதுவரை 55 பேர் உயிரிழந்த நிலையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்துள்ளனர். அதில், அதிக போதைக்காக விஷச்சாராயத்தில் பீங்கான் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மினரல் டர்பன்டைன் ஆயில் கலந்ததாக கூறியுள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த மாதேஷ் மினரல் டர்பன்டைன் ஆயிலை வாங்கி சப்ளை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருத்தாச்சலத்தில் உள்ள இரு பீங்கான் தொழிற்சாலைகளில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது

தொடர்புடைய செய்தி