ஓயாத மரண ஓலம்.. ஃபுல் போதையில் மயங்கிய தந்தை

57பார்த்தது
ஓயாத மரண ஓலம்.. ஃபுல் போதையில் மயங்கிய தந்தை
கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயத்தின் ஆபத்தை துளியும் உணராமல் இளைஞர் ஒருவர் மீண்டும் கள்ளச்சாராயம் குடித்து உள்ளார். இந்த இளைஞரின் மாமியார் ஏற்கனவே கள்ளச்சாராயம் குடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இப்போது மருமகனும் முழுபோதையில் சாலையோரத்தில் கிடந்துள்ளார். இதில், கொடுமை என்னவென்றால் அவரது குழந்தையும் கூடவே இருந்துள்ளது. குடிபோதையில், தந்தை இருக்க அந்த பெண் குழந்தை அவருக்கு அருகிலேயே இருந்துள்ளது. ஒரு கட்டத்தில், அந்த போதை இளைஞரை கட்டி அணைத்தபடி அந்த சிறுமி இருந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி