குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

52பார்த்தது
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு குளித்துக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை தேடும் பணியில் மீட்பு பணியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கு காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி