உயர் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது இரத்த நாளங்களில் கொழுப்பு படிவது, பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கும். நீண்ட நாட்களாக உயர் இரத்த அழுத்தம் இருப்பின் அது இதயத்தை பலவீனம் அடையச் செய்கிறது. இதனால் இதயம் சரியாக வேலை செய்யாது. இரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரகங்கள் கடுமையாக பாதிக்கும். இதனால் டயாலிசிஸ் செய்யும் நிலை கூட ஏற்படலாம். உயர் இரத்த அழுத்தம் கண்களை பாதிக்கிறது மற்றும் பார்வை குறைகிறது. நாட்பட்ட ரத்த அழுத்தம் ஞாபக மறதியை ஏற்படுத்தும்.