விருதுநகரில் இன்று (ஆக.9) நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மாநிலத்தில் போராடி வரும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நிதி இல்லை. மின்சார வாரிய கடனை அடைக்க மின் கட்டணத்தை உயர்த்தும் சூழலில் அரசுக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் அவசியம்தானா?. மக்கள் பயணிக்கும் சாலையை மறித்து யாரை மகிழ்விக்க இந்த கார் பந்தயம்?. பகட்டுக்காக, பொழுதுபோக்கிற்காக கார் பந்தயம் நடத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்” என்றார்.