புதுச்சேரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மீனவ சமுதாய மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் ரூ. 9.74 லட்சம் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி தவளக்குப்பத்தில் புதன்கிழமை (டிச. 25) நடைபெற்றது. இதில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை சட்டப்பேரவை தலைவர் செல்வம் வழங்கி அவர்களை வாழ்த்தினார்.