‘அனுபவி ராஜா அனுபவி’ என்ற படத்தில் கதாநாயகனாக நாகேஷ் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது படப்பிடிப்பு தளத்திற்கு வந்த கண்ணதாசன், "உனக்கு சென்னையை பற்றி என்ன தோணுதோ அதை சொல்லு" என நாகேஷிடம் கேட்க, "இங்க எங்கய்யா தமிழ் பேச ஆள் இருக்காங்க" என்று தனக்கு தோன்றிய விஷயங்களை கண்ணதாசனிடம் நாகேஷ் கூற, அந்த வார்த்தைகளை அப்படியே பிடித்துக் கொண்ட கண்ணதாசன் ‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்..’ என்கிற பாடலை 10 நிமிடங்களில் எழுதினார்.