கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி?

6690பார்த்தது
கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி?
* விற்பனை பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் மற்றும் அசல் நகல் இருக்க வேண்டும். * நீங்கள் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், கடன் வழங்குநரிடமிருந்து NOC ஆவணத்தை வழங்க வேண்டும். * தற்போதைய பட்டாவின் நகலில் விற்பனையாளரின் பெயர் இருக்க வேண்டும். * ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்டு போன்ற அடையாள ஆவணங்கள் இருக்க வேண்டும். * மேல்கூறிய ஆவணங்களை விண்ணப்ப படிவத்துடன் வைத்து தாசில்தார் அலுவலகம் அல்லது இ-சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். * விண்ணப்பித்த பிறகு உங்கள் சொத்து கிராமப் பிரிவின் கீழ் வந்தால், உங்கள் விண்ணப்பம் கிராம நிர்வாக அதிகாரிக்கு (VAO) மாற்றப்படும். பின் உங்கள் விண்ணப்பம் ஓரிரு வாரங்களில் தனி பட்டாவாக மாற்றி கொடுக்கப்படும்.

தொடர்புடைய செய்தி