கனமழை - தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

81பார்த்தது
கனமழை - தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “தூத்துக்குடியில் இடி, மின்னல் தாக்கியதில் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15 கால்நடைகள் இறந்துள்ளன. அதோடு 7 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மே 15ஆம் தேதி அறிவுறுத்தப்பட்டது. 8 மாவட்டங்களில் உள்ள சுமார் 2 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி