தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட். வெளுத்து வாங்கும் மழை.

13419பார்த்தது
தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட். வெளுத்து வாங்கும் மழை.
தமிழ்நாட்டில் இன்று (மே 19) அதி கனமழை கொட்டித் தீர்க்க உள்ளது. இதன் காரணமாக இன்று முதல் மே 21 தேதி வரை 3 நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி