100 கிலோ எடை கொண்ட ராட்சத மலைப்பாம்பு

56பார்த்தது
அசாம் மாநிலம் சில்சர் பகுதியில் அசாம் பல்கலைக்கழகத்தின் மாணவிகளின் விடுதிக்கு அருகில் ராட்சத மலைப்பாம்பு சுற்றித்திரிந்தது. இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சுமார் 17 அடி நீளமும் சுமார் 100 கிலோ எடை கொண்ட ராட்சத மலைப்பாம்பை பிடித்தனர். 7 பேர் கொண்ட குழுவினர் அந்த ராட்சத மலைப்பாம்பை கையில் பிடித்துக்கொண்டு நிற்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி