வருங்கால பிரதமர் எடப்பாடி பழனிசாமி?

50672பார்த்தது
வருங்கால பிரதமர் எடப்பாடி பழனிசாமி?
'பிரதமர் மோடியா? வருங்கால பிரதமர் எடப்பாடியா?' என சிவகங்கையில் அதிமுகவினரால் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது குஜராத் மோடியா? இந்த தமிழ்நாட்டு லேடியா? என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பேசி இருந்த பாணியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்ட நிலையில், பாஜகவை அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் விமர்சனம் செய்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி