பெடரேசன் கோப்பை.. தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

64பார்த்தது
பெடரேசன் கோப்பை.. தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் கலிங்கா ஸ்டேடியத்தில், 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்க பதக்கம் வென்றுள்ளார். 3 ஆண்டுகளில் முதன்முறையாக, இந்திய மண்ணில் நடந்த போட்டியில் அவர் பதக்கம் வென்றுள்ளார். போட்டியின் தொடக்கத்தில் முன்னிலை பெற கடுமையாக போராடினார். 3 சுற்றுகளுக்கு பின்னர், 2-வது இடம் பிடித்த அவர், 4-வது சுற்றில் 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து, முன்னிலை பெற்றார்.

தொடர்புடைய செய்தி