தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள சில சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்தநிலையில், தற்போது 25 சுங்கச்சாவடிகளில் இன்று (செப்டம்பர் 1) முதல் 5 - 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் இந்த சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டியது வரும் என கூறப்படுகிறது.