சென்னிமலையில் வெடி சத்தம் செய்த பைக் பறிமுதல்
சென்னிமலை நகர பகுதியில் வேகமாக செல்லும் சில வாகனங்களால் காரணமாக அடிக்கடி விபத்து சம்பவங்கள் நடைபெற்று வந்தது. விபத்துக்களை தடுக்கும் வகையிலும், வாகனங்களை கண்காணிக்கும் வகையிலும் பெருந்துறை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையில் சென்னிமலை நகர பகுதியில் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி சென்ற 30-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு சுமார் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சென்னிமலை தெற்கு ராஜ வீதி வழியாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளின் சைலன்சர் (புகை போக்கி) மூலம் வெடி சத்தத்தை எழுப்பபியடி வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.