ஈரோடு: கள் விற்றவர் கைது
சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் கோபி மதுவிலக்கு போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதியான நம்பியூர் பகுதியில் நேற்று கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நம்பியூர் அடுத்துள்ள வரப்பாளையம், மணியக்காரன்பாளையம் பகுதியில் ஒரு நபர் கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது, அங்கு ஒரு நபர் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கள்ளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த சென்னியப்பன் (55) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 லிட்டர் கள்ளையும் பறிமுதல் செய்தனர்.