கொடிவேரி அணைக்கு வர பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளனர்

79பார்த்தது
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை வழியாக 860 கன அடி தண்ணீர் வெளியேறி வருவதால் இன்று கொடிவேரி அணைக்கு வர சுற்றுலாபயணிகள் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளனர்

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையில் நீர் அருவி போல கொட்டுவதால் ஈரோடு மாவட்டம் மட்டுமன்றி சேலம் நாமக்கல் திருப்பூர் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அணைக்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில் , பவானி ஆற்றிலிருந்து கொடிவேரி அணை வழியாக 860 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது

இதனால் கொடிவேரி அனைவரையாக தண்ணீர் பாதுகாப்பு கம்பிகளை மூழ்கடித்து செல்கிறது இதனால் அணைக்கு வரும் சுற்றுலா பயனிகள் பாதுகாப்பு நலன் கருதி கொடிவேரி அணை இன்று மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்கவோ, மீன்கள் பிடிக்கவோ, பரிசல் பயனம் மேற்கொள்ளவோ, பொதுபணிதுறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அணையை சுற்றி சுற்றுலாப் பயணிகள் உள்ளே செல்லாதவாறு பொதுப்பணி துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி