ஈரோடு: நிரம்பிய குண்டேரிப்பள்ளம் அணை

78பார்த்தது
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியதை தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. அணை நிரம்பியதை தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையானது குன்றி மலையடிவாரத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அணையாகும். 42 அடி உயரத்தில் கட்டப்பட்டு உள்ள இந்த அணைக்கு குன்றி, விளாங்கோம்பை, மல்லியதுர்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட காட்டாறுகள் வழியாக மழை நீர் இந்த அணையை வந்தடைகிறது.

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து கொங்கர் பாளையம், வினோபாநகர் வாணிப்புத்தூர், குண்டேரிப்பள்ளம், மோதூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டு தோறும் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் குண்டேரிப்பள்ளம் அணையின் மொத்த உயரமான 42 அடியை எட்டிய நிலையில் உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது.
இதனால் அணையின் நீர் வழிப் பாதையில் உள்ள கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், வினோபாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்,

தொடர்புடைய செய்தி