புளியம்பட்டியில் பெய்த மழையால் தரை பாலம் மூழ்கியது

83பார்த்தது
சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் சுமார் இரண்டு மணி நேரம் பெய்த தொடர் மழையின் காரணமாக புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து நம்பியூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. மேலும் கழிவுநீருடன் சேர்ந்த மழைநீர் மீண்டும் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டியில் இன்று மாலை லேசான சாரத்துடன் மழை பெய்து பின்னர் சுமார் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக
கனமழை வெளுத்து வாங்கியது.

இதன் காரணமாக புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து நம்பியூர் செல்லும் சாலையில் உள்ள சிறிய தலைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதில் சிலர் ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடந்து சென்றனர்.

மேலும் புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழையால் அம்மன் நகர், தோட்டசாலை, சருகு மாரியம்மன் கோவில் வீதி மேலும் அப்பகுதியில் உள்ள அரசினர் விடுதி கட்டிடம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் கழிவுநீருடன் கலந்த மழைநீர் புகுந்தது இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி