
டி. என். பாளையத்தில் மது விற்றவர் கைது
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையத்தை அடுத்த பங்களாப்புதூர் உப்புபள்ளம் பஸ் நிறுத்தம் அருகே பங்களாப்புதூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டு மது விற்றதாக பங்களாப்புதூர் அண்ணா நகரை சேர்ந்த அய்யப்பன் (வயது 42) என்பவரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.