கோபி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி மகன் கண்முன் தாய் பலி

51பார்த்தது
கோபி பேருந்து நிலையம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி மகன் கண்முன் தாய் பலி

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பேருந்து நிலையம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி மகன் கண்முன் தாய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம். கண்ணமங்கலத்தை சேர்ந்த சுப்பிரமணி மனைவி சாவித்திரி (65). இவரது மகன் வெங்கடேஷ் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூரில் வசித்து வருகிறார். இந் நிலையில் மகனை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் சாவித்திரி கோபி வந்துள்ளார். தொடர்ந்து நேற்று சாவித்திரி வேலூர் செல்ல முடிவு செய்யவே, அவரை வெங்கடேஷ் பைக்கில் கோபி பேருந்து நிலையம் அழைத்து வந்துள்ளார்.

பேருந்து நிலையம் அருகே உள்ள சிக்னல் பகுதியில் திரும்பும்போதுஎதிர் பாராதவிதமாக பைக்கில் இருந்து சாவித்திரி நிலை தடுமாறி கீழே விழுந்தார்
கோபி பேருந்து நிலையம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி மகன் கண் முன் தாய் பலியானார்.
அப்போது பின்னால் அந்தியூரை நோக்கி சென்ற லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய கண்ணம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். லாரி ஓட்டுநரான பவானி அருகே உள்ள துரு சாம்பாளையத்தை சேர்ந்த சுதாகரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். மகனை பார்க்க வந்த தாய், மகன் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி