கோபி அருகே தனியார் பஸ்ஸும் பிக்கப் வாகனம் விபத்து

561பார்த்தது
கோபிசெட்டிபாளையத்திலிருந்து கோவை செல்ல பிக்கப் வாகனம் ஒன்று நம்பியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தை கோவைபுதூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவர் ஒட்டி வந்தார் அதேபோல மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று 40 பயணிகளை ஏற்றுக்கொண்டு நம்பியூர் கே. மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது
அப்போது கே. மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு வளைவில் எதிர்பாராத விதமாக பிக்கப் வாகனமும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் பேருந்தின் முன் பக்கம் மற்றும் பிக்கப் வேனில் முன்பக்கம் சேதமடைந்தது, இதில் பிக்கப் வாகனத்தில் பயணம் செய்த வடமாநில இளைஞர்கள் நித்திக்ஷ் மற்றும் நவீன் ஆகியோருக்கு தலை மற்றும் காலில் லேசான காயங்கள் ஏற்பட்டதுபேருந்தில் பயணம் செய்த சுமார் 40 பயணிகளும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லைவிபத்தில் காயமடைந்த இரண்டு வடமாநில இளைஞர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நம்பியூர் காவல் துறையினர் இந்த விபத்து குறித்து தனியார் பேருந்து ஓட்டுனர் உருமம்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மற்றும் பிக்கப் வாகன ஓட்டுநர் கோவைபுதூர் பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி ஆகியோரிடம் நம்பியூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி