கோபி: கேஸ் கசிவால் தீப்பிடித்து எரிந்த வீடு

2594பார்த்தது
கோபி கடத்தூர் பள்ளிக்கூடம் பிரிவை சேர்ந்தவர் பழனி (97). இவர் முதுமை காரணமாக உடல்நிலை சரியில்லாமல் கடத்தூர் பள்ளிக்கூடம் பிரிவு பகுதியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்துவருகிறார். மகள் வேலைக்கு சென்று விட்ட நிலையில் உடல் நலம் சரியில்லாத பழனி தனியாக வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டின் மேற்கூரிலிருந்து வந்த புகையை கண்டு பகுதி பொதுமக்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது வீடு தீப்பற்றி தெரிந்ததை கண்டு அருகில் இருந்தவர்கள் சத்தியமங்கலம் மற்றும் நம்பியூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் உடல்நிலை சரியில்லாத பழனி என்பவர் தீ விபத்தில் சிக்கிக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் வீட்டினுள் சிக்கிக் கொண்டிருந்த பழனி என்பவரை அங்கு இருந்து மீட்டனர். இதில் பழனி என்பவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதால் கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தீபத்தானது கேஸ் கசிவினால் ஏற்பட்டிருக்கலாம் என கடத்தூர் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்ட வீட்டின் அருகில் குடியிருப்புகள் இல்லாததால் பெரும் தீபத்து தவிர்க்கப்பட்டது. வீட்டின் கேஸ் கட்சியினால் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி