ஈரோட்டில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவர் கைது
ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனுமதி இன்றி பட்டாசு விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதியில் ஒரு கடையில் அனுமதி இன்றி பட்டாசு விற்பனை செய்வதாக டவுன் போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அனுமதி இன்றி குழந்தைகள் வெடிக்கும் பாப் பாப் கல் வெடிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடையின் உரிமையாளரான அதே பகுதியைச் சேர்ந்த நெமிசந்த் (50) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 65 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்