இரு விவசாயி தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு

59பார்த்தது
முறை நீர் வைத்து தண்ணீர் திறப்பு தொடர்பாக
இரு விவசாயி தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு

கீழ்பவானி பிரதான கால்வாயில் முறை நீர் வைத்து தண்ணீர் திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோடு கோண வாய்க்காலில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்ட பொறியாளர் திருமூர்த்தி தலைமை வகித்தார். இதில் முறை நீர் வைத்து தண்ணீர் விட வேண்டும், முறை நீர் வைத்து தண்ணீர் விடக்கூடாது என இரு தரப்பு விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது இரு தரப்பு விவசாயிகளுடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு பிறப்பு விவசாயிகள் கூறும்போது, முறை வைத்து தண்ணீர் விடக்கூடாது என்றும் தொடர்ச்சியாக தண்ணீர் விட வேண்டும் என்றும் கூறினர். அப்போதுதான் கடைமடை வரை தண்ணீர் செல்லும். விவசாயிகள் பணி மேற்கொள்ள வசதியாக இருக்கும் என்றனர். பருவமழை தொடங்கும் வரை முறை வைக்காமல் தண்ணீர் விட வேண்டும். இதற்கு எதிர் தரப்பு விவசாயிகள் கண்டனம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, இருதரப்பு விவசாயிகள் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி