பெருமாள் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..

77பார்த்தது
ஈரோட்டில் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனமுருக வேண்டுதல், ஈரோடு கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.



புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, அனைத்து வைணவத் தலங்களிலும் பெருமாளுக்கு சிறப்பு விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோவிலில் பெருமாளுக்கு புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு திருமஞ்சனம், விசேஷ பூஜைகள் மற்றும் அலங்கார வழிபாடுகள் நடைபெற்றன.
இதில் அதிகாலை முதலே திரளான பக்தர்கள் பெருமாள் கோவிலுக்கு வந்து வரிசையில் நீண்ட வரிசையில் நின்றவாறு சாமி தரிசனம் செய்ய காத்திருந்து தரிசித்துச் செல்கின்றனர். தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு லட்டு மற்றும் பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.


ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதங்களில் பக்தர்கள் பெருமளவில் வருகை தருவது வழக்கம். இன்று மற்ற சனிக்கிழமைகளைக் காட்டிலும் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையில் பக்தர்கள் வருகை வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி