தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாள் களே உள்ள நிலையில் ஞாயிற் றுக்கிழமை ஈரோடு கடை வீதி யில் மக்கள் கூட்டம் அலைமோ
அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டா டப்பட உள்ளது. இதை முன் னட்டு, ஈரோடு மாநகரில் கடந்த ஒரு வாரமாக ஜவுளிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகை யான ஆபரணங்கள், அலங்கா ரப் பொருள்கள் விற்பனைக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பண்டிகைக்கு இன்னும் 10
நாள்களே உள்ள நிலையில் விடு முறை நாளான ஞாயிற்றுக்கி ழமை ஈரோடு நகரில் உள்ள ஆர் கேவி சாலை, நேதாஜி சாலை, ஈஸ்வரன் கோயில் வீதி, பன் னீர்செல்வம் பூங்கா, மேட்டூர் சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை, பெருந்துறை சாலைஉள் ளிட்ட நகரில் பல்வேறு பகுதிக ளிலும் உள்ள ஜவுளிக் கடைக ளிலும், பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள ஜவு ளிக் கடைகளிலும் காலை 9 மணி முதலே மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
ஈரோடு நகரம் மட்டுமின்றி
மாவட்டத்தின் பல்வேறு பகு திகளில் இருந்தும் பொதுமக் கள் குடும்பத்தினருடன் புத்தா டைகள் வாங்க வந்திருந்ததால் மதியத்துக்கு பின்னர் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட் டது. தவிர சாலையோர தற்கா லிக கடைகளிலும் வியாபாரம் களைகட்டியது. இதனால் நகர் முழுவதும் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டது.