பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து டி. ஐ. ஜி சரவண சுந்தர் ஆய்வு

59பார்த்தது
தீபாவளி பண்டிகையை வருகின்ற 31ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், புத்தாடைகளை வாங்குவதற்காக ஜவுளி கடைகளை நோக்கி மக்கள் படையெடுக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில், ஈரோட்டில் ஜவுளி கடைகள் நிறைந்த பகுதிகளான, பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, ஆர். கே. வி சாலை, ஈஸ்வரன் கோவில் வீதிகளில் செயல்படும் ஜவுளி கடைகளில் புதுபுது டிசைன்களில் ஜவுளி துணிகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய வீதிகளில் தற்காலிகமாக 500-க்கு மேற்ப்பட்ட சாலையோர கடைகள் போடப்பட்டு, ஜவுளி துணி மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொருட்களை வாங்க வரும் பொதுமக்களிடம் மர்மநபர்கள் கைவரிசையை காட்டாத வண்ணம், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மாநகரின் முக்கிய இடங்களில் 14 உயர்கோபுரங்கள், 24 சிசிடிவி கேமரா மற்றும் 2 ட்ரோன் கேமராக்களுடன், 100-க்கு மேற்பட்ட போலீசார் சுழற்ச்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு பணிகள் குறித்து கோவை சரக டி. ஐ. ஜி சரவணசுந்தர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ட்ரோன் கேமராக்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் குறித்தும், பணியில் உள்ள போலீசார் குறித்தும் மாவட்ட எஸ். பி ஜவஹரிடம் கேட்டறிந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி