ஈரோட்டில் ஜெனரேட்டர் வழங்குவதாக ரூ. 4. 85 லட்சம் மோசட

75பார்த்தது
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின்(பேட்டியா) பொதுசெயலாளர் ரவிச்சந்திரன். இந்த கூட்டமைப்பிற்கு நசியனூர் சாலை விவேகானந்தர் தெருவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சொந்த கட்டிடம் கட்டப்பட்டது. கட்டிடத்திற்கு புதிதாக ஜெனரேட்டர் வாங்க முடிவு செய்து, சென்னையை சேர்ந்த பவர் கேர் சொல்யூசன்ஸ் பெயர் கொண்ட நிறுவனத்தினை இணையதளம் மூலம் அணுகியுள்ளன அந்த ஜெனரேட்டரை ரூ. 6. 85 லட்சத்திற்கு வழங்குவதாக ரவிச்சந்திரனிடம், கண்ணன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி முன்பணமாக ரூ. 85 ஆயிரம், அதற்கு மறுநாள் 27ம் தேதி ரூ. 4 லட்சத்தையும் வங்கி மூலமாக அனுப்பி வைத்தனர். மீதமுள்ள பணத்தை ஜெனரேட்டர் பொறுத்தியதும் வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால், பணத்தை பெற்றுக்கொண்டு ஜெனரேட்டர் வழங்காமல், முறையாக பதில் அளிக்காமல் இருந்துள்ளனர். இதையடுத்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையத்தில் ரவிச்சந்திரன் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில், பவர் கேர் சொல்யூசன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கண்ணனை விசாரணை நடத்தியதில், அவர், பணத்தை திரும்ப தருவதாக உறுதியளித்துள்ளார். ஆனால், கண்ணன் பணத்தை தராததால் மீண்டும் அளித்த புகாரின்பேரில், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் கண்ணன், நிர்மலா மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். இதில், கண்ணனை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி