வணிக வளாகத்தில் சுவர் இடிந்து விழுந்து கட்டிய தொழிலாளி பலி

57பார்த்தது
ஈரோடு ஜவுளி வணிகவளாகத்தின் முதல் தளத்தில் சுவர் இடிந்து விழுந்து கட்டிடத் தொழிலாளர் சுப்பிரமணி என்பவர் தலை நசுங்கி பலி மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே அப்துல்கனி ஜவுளி வளாகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று அனைத்து வசதிகளுடன் கூடிய 3 தளம் கொண்ட புதிய ஜவுளி வளாகம் கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய ஜவுளி வலாகத்தின் முதல் தளத்தில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான கடையை இரண்டாக பிரித்து   கடையின் நடுவே உள்ள சுவர் அகற்றும் பணியில் ஈரோடு கருங்கல்பாளையம் குயிலான் தோப்பு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஆனந்தன் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடையின் நடுவே இருந்த சுவர் திடீரென விழுந்ததில் கட்டிட வேலை செய்து வந்த கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் இடிந்து விழுந்ததில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர் ஆனந்தன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு நகர காவல் துறையினர் உயிரிழந்த சுப்பிரமணியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி