ஈரோடு நகரம் - Erode City

ஈரோட்டு: நேதாஜி தினசரி காய்கறி வியாபாரிகள் கொண்டாடிய தீபாவளி பண்டிகை

ஈரோட்டில் நேதாஜி தினசரி காய்கறி வியாபாரிகள் ஒன்றிணைந்து கொண்டாடிய தீபாவளி பண்டிகை. தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில் ஈரோடு வ. உ. சி பூங்கா மைதானத்தில் செயல்படரடு வரும் நேதாஜி தினசரி காய்கறி வியாபாரிகள் சார்பில் காய்கறி மார்க்கெட் முன்பாகவே புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் காய்கறி வியாபாரிகள் ஒன்றிணைந்து பாரம்பரிய உடையான வேட்டி - சட்டை அணிந்து பட்டாசுகள் வெடித்து மகிழந்தனர். கம்பிமத்தாப்பூ , சரவெடி , வாண வேடிக்கை என பல வகையான பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பட்டாசுகளை வெடித்து மகிழந்த காய கறி வியாபாரிகள் பின்னர் வழக்கம்போல் தங்களது காய்கறி விற்பனையை தொடர்ந்தனர்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా