ஈரோடு: குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது

58பார்த்தது
ஈரோடு: குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது
ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. 7.45 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. 

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் ஒரு முழுக்கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் இலவச வேட்டி, சேலை ஆகியவை நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தது. 

இதையடுத்து பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்குவதற்கான விநியோகம் செய்யும் பணி இன்று தொடங்கியுள்ளது. நேற்று (ஜனவரி 3) தொடங்கி வரும் 8-ம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி