ஈரோடு: பாடபுத்தகம் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரம்

65பார்த்தது
ஈரோடு: பாடபுத்தகம் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரம்
ஈரோடு மாவட்டத்தில் மூன்றாம் பருவ பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரம்.

ஈரோடு மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்க மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள், நோட்டுகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு நிறைவடைந்து, விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் வருகிற ஜனவரி 2-ம் தேதி திறக்கப்படுவது. 

இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்க தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து ஈரோடு மாவட்ட மாணவ-மாணவிகளுக்குரிய மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வந்தடைந்தன. அவற்றை பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் சரிபார்த்து, அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி