பெருமாள் மலை கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்
ஈரோடு அருகே ஆர். என். புதூர் அருகே உள்ள பெருமாள் மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமங்களகிரி பெருமாள் கோயிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.