கோபி அருகே மஞ்சள் பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனம் விபத்து

55பார்த்தது
கோபி அருகே மஞ்சள் பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனம் விபத்து
கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து நேற்று இரவு மஞ்சள் பாரத்தை (லோடு) ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் ஒன்று கிளம்பியது. சரக்கு வாகனத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (35) என்பவர் ஓட்டினார். சரக்கு வாகனத்தில் குருமந்தூர், இந்திரா காலனியைச் சேர்ந்த சீனிவாசன் (45), ராமன் (52), பழனி (67), வினோத் (22), ரமேஷ் (36) ஆகிய கூலி ஆட்களும் பயணம் செய்தனர். சரக்கு வாகனம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே ஒளவையார்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. 

அப்போது எலத்தூர் - மூணாம்பள்ளி செல்லும் சாலை, எலத்தூர் குளம் பகுதி அருகே வந்தபோது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் திடீரென சரக்கு வாகனத்திற்கு முன்பு வந்து விட்டார். அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் மணிகண்டன் திடீரென பிரேக் பிடித்ததில் அருகே சாலையோரம் உள்ள பள்ளத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் மணிகண்டன், வாகனத்தின் மேலே அமர்ந்து வந்த கூலி ஆட்கள் சீனிவாசன், ராமன், பழனி, வினோத், ரமேஷ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. பள்ளத்தில் தண்ணீர் இருந்ததால் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி