காவிரி ஆற்றின் நடுவே தத்தளித்தவரை மீட்ட தீயணைப்பு துறை

78பார்த்தது
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் உத்தமன் மகன் பெருமாள், 35; பெற்றோரை இழந்த இவர், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றி திரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம், குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்த இவரை அப்பகுதியினர் அங்கிருந்து அடித்து விரட்டி விட்டனர்.
அங்கிருந்து வந்த பெருமாள், பவானி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே காவிரி நீரேற்று நிலையம் பின்புறம், காவிரி ஆற்றின் நடுவில் உள்ள பாறையில், விடிய விடிய குடிப்பதற்கு தண்ணீர் பாட்டில்களுடன் படுத்திருந்தார்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 8, 000 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
இதனால், ஆற்றில் நடுவே இருந்த பாறையை வெள்ளம் சூழ்ந்ததால் வெளியேற முடியாமல் விடிய விடிய தவித்து வந்தார். பவானி தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததை
தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் பரிசல் மூலம் அவரை மீட்டனர்.
விசாரிக்கையில், தன்னை தாக்கியதால் வேதனை அடைந்த ஆற்றின் பாறை மீது வந்து படுத்திருந்ததாக தெரிவித்துள்ளார். பசியால் தவித்த பெருமாளுக்கு உணவளித்த தீயணைப்பு படையினர் பாதுகாப்புடன் செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி